NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

TNPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று : வெற்றி யாருக்கு ?

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் இடையிலான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல். – TNPL) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகியது.

கோவை, சேலம், நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய இடங்களில் நடந்த லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றை அடைந்தன.

4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி அணிகள் முறையே 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.


இந்நிலையில் TNPL போட்டித்தொடரின் இறுதிப்போட்டி இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் இந்த போட்டியில்
நடப்பு சாம்பியன் அணியான கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்ளவுள்ளது.

Share:

Related Articles