டுவிட்டர் வலைதளத்தில் உள்ள டுவீட்டெக் (TweetDeck) வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், இனி பயனர்கள் வெரிஃபைடு (Verified) அதாவது சரிபார்க்கப்பட்டவர்கள்- எனும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்னும் 30 நாட்களில் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவீட்டெக் பழைய பதிவுகளை எளிதாக பார்ப்பது உட்பட பலவிதமான எளிதான படிக்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. தற்போது புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டுவீட்டெக்கை பயன்படுத்தி வெரிஃபைடு அவசியம் என்ற நிலையில், பயனர்களிடம் கட்டணம் வசூலிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், டுவிட்டரின் உள்ளடக்கத்தை எளிதாக கண்காணிக்க டுவீட்டெக் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், இது டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து விளம்பர வருவாய்க்கு மிகவும் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.