NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

YouTube’ல்அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோ : சந்திரயான்-3 சாதனை !

நிலவில் இந்தியா சார்பில் இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷனின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதன் 26 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் உலாவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சந்திரயான்-3 தரையிறக்க நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பானது. அதில் யூடியூப் தளத்தில் மட்டும் அதிக பார்வையை பெற்று, அது உலக சாதனையாகவும் அமைந்துள்ளது. யூ-டியூப் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேரலை வீடியோ என்ற சாதனை நிகழ்ந்துள்ளது.

யூ-டியூப் தளத்தில் மட்டும் நேரலை நிகழ்வை சுமார் 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையை நிகழ் நேரத்தில் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னர் யூ-டியூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பான வீடியோக்களில் ‘கால்பந்து உலகக் கோப்பை 2022’ தொடரின் பிரேசில் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 61 இலட்சம் பார்வையை அதிகபட்சமாக பெற்றிருந்தது.

அதே தொடரில் பிரேசில் மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 52 இலட்சம் பார்வையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles