NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

YouTube Gameகளினால் பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி!

கொச்சிக்கடையில் அரசாங்க பாடசாலை ஒன்றின் மாணவன், யூடியூப் சேனல்களில் உள்ள கேம்களை விளையாடி பார்க்க முயன்றபோது மற்றொரு மாணவனை கல்லால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான ஒன்பதாம் தர மாணவன் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையின் கண் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் சிறிது காலம் சிகிச்சை தேவைப்படும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை இரண்டாகப் பிரிந்து, ஆசிரியர் மேசையில் போடப்பட்டிருந்த துணியால் முகத்தை மூடிக்கொண்டு மாணவர்களை அடித்துள்ளனர்.

குறித்த மாணவனை தாக்க சென்ற போது, அவர் ​​தப்பிச் செல்ல ஓடியுள்ளார். இதன் போது மற்றுமொரு மாணவன் எறிந்த கல்லினால் தப்பிச் செல்ல முயன்ற மாணவன் படுகாயமைடைந்துள்ளார்.

கண்களில் இரத்தம் வழிந்த போது ஏனைய மாணவர்கள் துணியால் இரத்தத்தை துடைத்ததாக தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles