NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அண்டார்டிகாவில் புதிய ஆராய்ச்சி தளத்தை அமைக்க சீனா திட்டம்!

அண்டார்டிகாவில் புதிய ஆராய்ச்சி தளம் ஒன்றை கட்டியெழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.  

இராஸ் கடலின் கடலோர பகுதியில் 5-வது ஆராய்ச்சி மையத்திற்கான கட்டுமான பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பணியை வருகின்ற 2024 ஆம் ஆண்டு பெப்ரவரிக்குள் நிறைவு செய்வது என சீனா திட்டமிட்டுள்ளது.  

இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த கட்டுமான பணியுடன் கூட, அண்டார்டிகாவின் சுற்றுச்சூழலில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட கூடிய பாதிப்பு பற்றி ஆராய்ச்சி குழு ஆய்வு மேற்கொள்ளும். இதேபோன்று, உலகளாவிய பருவநிலை மாற்றத்தில் இந்த பகுதியின் பங்கு பற்றியும் ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிழக்கு அண்டார்டிகாவில் அமையுவுள்ள புதிய தளத்துடன், செயற்கைக்கோள் நிலையம் ஒன்றும் மற்றும் கண்காணிப்பகமும் அமைக்கப்படும். அண்டார்டிகாவில் ஆய்வு தளம் கட்டுமான பணிக்காக 80 சீன மையங்களை சேர்ந்த 460 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles