NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழில் இளைஞர் உயிரிழப்பு!

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டார்.

இந்நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles