NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது..!

நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 10 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

23 பேரும் இன்று (03) யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதவான் நளின சுபாஸ்கரன் முன்னிலையில் முன்நிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கினை ஆராய்ந்த நீதவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் குறித்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்றமையால் அவர்களுக்கு தலா 4 மில்லியன் அபராத தொகையினை செலுத்தும் அதேவேளை 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், அபராத தொகை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles