(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று (13) உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் போக்குவரத்திற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் சோதனை ஓட்டத்திற்காக குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
48.5 கிலோமீற்றர் நீளமான அநுராதபுரம் – வவுனியா பாதையானது இந்தியக் கடன்; உதவி திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.