NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அந்தரத்தில் தொங்கிய கேபிள் கார் – 8 பேர் பத்திரமாக மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியத்தில் உள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க மக்கள் கேபிள் கார் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று (22) காலை 7 மணியளவில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் ஒரு கேபிள் காரில் பயணம் செய்தனர்.

தரையில் இருந்து சுமார் 1,200 அடிக்கு மேலே அது செல்லும்போது கயிறு திடீரென அறுந்தது. இதனால் அந்த கேபிள் கார் பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.

இந்நிலையில், 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தைகள் உட்;பட 8 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டதாக, தற்காலிக பிரதமர் அன்வர் உல் ஹக் கர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles