(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அமெரிக்கா – மெக்சிகோவின் ஒக்ஸாகா மாகாணத்தில் மலைப் பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.