அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மொத்தமாக பற்றியெரிந்துவரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டுப்படுத்த முடியாமல் 6 பகுதிகளில் காட்டுத்தீ பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 11 பேர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 13 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும் என்பதால்இ தீயை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கட்டமைப்புகள் எரிந்து தரைமட்டமாகிவிட்டுள்ள நிலையில், பலிஸாதீஸ் தீ இன்னும் மிகவும் ஆபத்தானதாகவே அஞ்சப்படுகிறது. குறைந்தது 22,660 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,316 கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையில்இ தீ 11 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஈட்டன் பகுதியில் சமீபத்திய அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் சுமார் 15,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இப்பகுதியில் 7,000 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் தீயினால் சேதமடைந்துள்ளனஇ 15 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதி மீறல்களுக்காக ஏற்கனவே 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈட்டன் மற்றும் பாலிசேட்ஸ் தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறுதல், அத்துமீறி நுழைதல், கொள்ளை மற்றும் கொள்ளையடித்தல் போன்ற குற்றங்களுக்காக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக தற்போது பிரெண்ட்வுட் மற்றும் என்சினோவின் சில பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கட்டாயம் வெளியேற வேண்டும் என அதிகாரிகள் தரப்பு உத்தரவிட்டுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபலங்கள் பலர் குடியிருக்கும் பகுதியாகும் பிரெண்ட்வுட். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜெனிஃபர் கார்னர் உள்ளிட்ட பிரபலங்களின் குடியிருப்புகள் இப்பகுதியில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் தான் 6.6 மில்லியன் டொலர் மதிப்பிலான குடியிருப்பு ஒன்றில் அரசியல்வாதியான ரொபட் கென்னடி வசித்து வருகிறார். மேலும், பிரபலங்கள் பலரது குடியிருப்புகள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தேவைப்பட்டால் முகக்கவசங்களை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லொஸ் எஞ்சல்ஸ் காட்டுத்தீயால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் சேதங்களின் மதிப்பு 150 பில்லியன் டொலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.