NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசாங்கத்திடம் இருந்து மகிழ்ச்சிகரமான செய்தி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் வருமான மட்டத்திற்கு ஏற்றவாறு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அதற்காக 9 வீட்டுத் திட்டங்களை விரைவாக நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கான அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு இந்த வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், இலங்கையிலுள்ள ஒப்பந்த நிறுவனங்களினால் இந்த வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles