NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண் கொடிய பக்டீரியா தொற்றால் பாதிப்பு!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளை பார்க்கச்சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்டீரியா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலை இந்த நோயை உண்டாக்கும் பக்டீரியாக்கள் உண்ணுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த 74 வயதான தாய் ஒருவர் தனது  மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இதன்போது  கடுமையான இருமல் மற்றும் ஒரு கை வீங்கி நீல நிறமாக மாறிய நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் முதலில் பக்டீரியாக்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நீண்ட பரிசோதனையின் பின்னர் பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து அவரது கையை அகற்றியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles