இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் இரண்டு போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று (28) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 222 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கலாக 123 ஓட்டங்களைப் பெற்று சர்வதேச T-20இல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம், சர்வதேச T-20 போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும், சர்வதேச T-20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரர் ({ப்மன் கில் 126 முதலிடம்), கடைசி 3 ஓவர்களில் அதிகபட்ச ஓட்டங்கள் (52) எடுத்த இரண்டாவது வீரர் (யுவராஜ் சிங் 54 முதலிடம்) என்ற சாதனைகளை படைத்தார்.