மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அஸ்வசும நலன்புரி வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்த உண்மைகளை முன்வைக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், பரிசீலனைகள் நிறைவடைவதற்குள் பயனாளிகளின் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் போது 10 இலட்சத்து 24 ஆயிரத்து 59 மேன்முறையீடுகளும், ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 495 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அத்துடன், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தகுதி பெறாத 3 இலட்சத்து 93 ஆயிரத்து 94 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.