NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை A அணி தகுதி!

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை A அணி இன்று (25) பாகிஸ்தான் ஏ அணியை தோற்கடித்து தகுதி பெற்ற்றுள்ளது.

ஓமானில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் அரையிறுதி போட்டி அல் அமெரத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில், பாகிஸ்தான் ஏ அணி பெற்ற 136 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை இலங்கை அணி 17ஆவது (16.3) ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.

இலங்கை அணி சார்பில் அஹான் விக்ரமசிங்க, 46 பந்துகளில் ஒரு ஆறு ஒட்டம் மற்றும் 4 நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதேபோன்று, லஹிரு உதார 20 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (25) இரவு அல் அமெரத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles