NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம்: பிரம்மாண்ட கப்பலில் கோலாகல கொண்டாட்டம்!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழா மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்தது. அதன்பிறகு தற்போது இந்த ஜோடியின் இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய விழாவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டின் திருமணத்திற்கு முந்தைய விழா மே 29ஆம் தேதி இத்தாலியில் தொடங்கியது. இந்த விழா மே 29 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. இது இத்தாலியில் இருந்து பிரான்சுக்கு ஒரு பயண விருந்தாக இருக்கும். தம்பதிகளின் திருமணக் கொண்டாட்ட வைபவங்கள் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளன. இதற்காக அம்பானி குடும்பத்தினர் இத்தாலி சென்றுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles