(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மயக்க ஊசி மருந்துகள் இன்று (13) பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய மயக்க மருந்துகளுக்குப் பதிலாக மற்றொரு இந்திய மருந்து நிறுவனத்திடமிருந்து இந்த மயக்க மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ப்ரோஃபோல் ரக மயக்க மருந்து வகைகளை பாவனையில் இருந்து நீக்கியதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ வழங்கல்) வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பேராதனை போதனா வைத்தியசாலையிலும் தேசிய கண் வைத்தியசாலையிலும் மயக்க ஊசி செலுத்திய பல நோயாளிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.