இனவாதத்தை வைத்து அரசியல் செய்யதா ஒரே தரப்பு தாம் தான என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
திருகோணமலை – கிண்ணியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ANURA – VOICE CUT
76 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்து வீழ்த்தக்கூடிய அனைத்து விதத்திலும் நாட்டை வீழ்ச்சியடைய செய்துள்ளனர். சகல கருத்துக்கணிப்புக்களிலும் தேசிய மக்கள் சக்திதான் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
தென் மாகாணம் உள்ளிட்ட சிங்கள மக்கள் வசிக்கும் அனைத்து மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்திக்கான வெற்றிய நிச்சியிக்கப்பட்ட வெற்றியாக மாறிவிட்டது. ஏனைய கட்சிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளன. பொய் மற்றம் போலியான தேர்தல் பிரசாரங்களை அவர்கள் செய்துகொண்டு வருகின்றனர். ரவூப் ஹக்கீம் நான் கூறிய விடயங்களை திரிபுப்படுத்தி கூறியுள்ளார். அதை அவர் திருத்திக்கொள்ளவிட்டால் நான் அவர் மீது வழக்குப் பதிவு செய்வேன்.