77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று 285 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட அரச பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 6 பெண் கைதிகள் உட்பட 285 பேர் விடுதலைச் செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கும், அவர்களின் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.