NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று வானில் தோன்றும் நீல நிலவு…!

  இன்று (30) Super Blue Moon(பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

Super moon தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும்.

ஒரே மாதத்தில் 2 பௌர்ணமி தினங்கள் வந்தால், அந்த 2 ஆவது பௌர்ணமி புளூ மூன் என அழைக்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் ஜனவரி, மார்ச் மாதங்களில் இரு தடவைகள் Blue Moon கள் வந்தன. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டில் BLUE MOON ஏற்பட்ட நிலையில் இன்று BLUE Moonதோன்றவுள்ளது.

அதேவேளை அடுத்த Blue Moon  2026 மே மாதம் ஏற்படும் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.    இந்நிலையில்   இந்த  அபூர்வ வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும் என்பதால் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Share:

Related Articles