NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மே.தீவுகள் குழாத்தில் மாற்றம் !

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி தங்களுடைய முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்திருந்த நிலையில், தமது குழாத்தில் ஒரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி,வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரான ரெய்மன் ரீபர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் கெவின் சின்கிளைர் முதன்முறையாக டெஸ்ட் குழாத்துக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.

கெவின் சின்கிளைர் 18 முதற்தர போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளை சாய்த்துள்ளதுடன், ஆறு அரைச்சதங்களுடன் 756 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

கெவின் சின்கிளைர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், முதல் போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏனைய வீரர்கள் தொடர்ந்தும் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை போர்ட் ஒஃப் ஸ்பெய்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles