NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை அகதியை இறந்ததாக அறிவித்த இந்திய அதிகாரிகள்.

தமிழ்நாட்டில் வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் உயிருடன் இருக்கும் இலங்கை அகதி ஒருவரை இறந்துவிட்டதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நல ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் குறித்த நபரின் அத்தை சிறப்பு முகாமில் தனது மருமகன் உயிருடன் இருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

1990ல் மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் தற்போது, உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள் முகாமில் நாகேஸ்வரி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். ஜூலை 20, 2015 அன்று, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் அவரது மருமகன் கந்தன் என்கிற கிருஷ்ணகுமார் ராமநாதபுரத்தில் கியூ-பிராஞ்ச் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.2018ல் ராமநாதபுரம் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டில், உயர் நீதிமன்றம் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது.

ஏப்ரல் 17 அன்று, காந்தன் இறந்துவிட்டதாக அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து கந்தன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறி நாகேஸ்வரி நீதிமன்றத்தை நாடி உள்ளார். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Share:

Related Articles