வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கை தொழிலாளர்களுக்கு அங்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
காஸா பகுதியில் மோதல்கள் ஆரம்பமானதில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இலங்கை தொழிலாளர்கள் அங்கேயே நிலைகொண்டுள்ளதாகவும் அவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிராகரித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், பொறுப்பற்ற கருத்துகள் மூலம் இராஜதந்திர உறவுகளை சீர்குலைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.