இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை (SLFR) 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்று (05) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.