ஏலத்தில் விடப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுதினம் 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளன.
மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.