NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி..!

நீர்வழங்கல் மற்றும் சுகாதார நல மீள் கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, இலங்கைக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2 கடன் வசதிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதன் முதலாவது வேலைத்திட்டமான காலநிலை தாங்குதிறன், அனைத்து தரப்பினரையும் உள்வாங்கல், சுற்றாடல் பேண்தகு நிலைமையை வலுப்படுத்தல் என்பவற்றுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

Share:

Related Articles