சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு வெளிவிவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவிக்கையில்,
இது தொடர்பான கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீன கப்பல் இலங்கைக்கு வரும் திகதிகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது.
எனினும் வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகமும் கப்பலுக்கு அனுமதி கேட்டு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
சீன ஆராய்ச்சிக் கப்பலான ‘ஷீ யான் 6’ ஒக்டோபர் முதல் நவம்பர் வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கப்பல் தென் இந்திய பெருங்கடல் பகுதியை உள்ளடக்கிய விரிவான ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.