NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈபிள் கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டது!

பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக ஆறு நாட்கள் மூடப்பட்ட பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் ஞாயிற்றுக்கிழமை (25) பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோபுரத்தில் துருப்பிடித்த தடயங்கள், சம்பள உயர்வுகள் மற்றும் வரலாற்றுச் சின்னத்தை சிறப்பாகப் பராமரிக்கக் கோரி அதன் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஈபிள் கோபுரத்தின் இயக்குநர்கள் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் எட்டிய உடன்பாட்டுக்கு அமைவாக பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் 330-மீட்டர் (1,083-அடி) கோபுரம் இரண்டாவது தடவையாக இது போன்ற பணிப்பகிஷ்கரிப்பினை எதிர் கொண்டது.

ஈபிள் கோபுரத்தின் இயக்குநர்கள், ஈபிள் கோபுரத்தை பார்வையிடுவதற்காக அனுமதி சீட்டுகளை வைத்திருந்த பார்வையாளர்களுடன் மன்னிப்பு கோரியதுடன், பாரிய இழப்பினையும் சந்தித்தது.

Share:

Related Articles