நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோரே ஜனாதிபதி முன்னிலையில் புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.



