உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கட்டுநாயக்கவில் நேற்று நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்; விசாரணைகளை மூடி மறைப்பதற்காக சில வாடகை ஒப்பந்தக்காரர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சில நபர்கள் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்காக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விசாரணைகளை முறையாக முன்னெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத் தொகுதியை முறைப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை சீர்குலைப்பதற்காக சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உண்மையாக அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை மறைப்பதற்கு மீண்டும் சூழ்ச்சியாளர்கள் வெளியில் வந்துள்ளதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.