NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கலவை குத்துச்சண்டை போட்டியில் 9 பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர, வீராங்கனைககளும் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

காஷ்மீர், ஸ்ரீநகர் எஸ்.கே. உள்ளக விளையாட்டரங்கில் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.

உலக கலவை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்திய கலவை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்திய போட்டியில் 26 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர்.

எடைப்பிரிவு மற்றும் பகிரங்க பிரிவு ஆகிய இரண்டு வகைப் பிரிவுகளைக் கொண்ட இப் போட்டியில் சண்முகநாதன் சஞ்சயன் ஜயவர்தன செவ்மினி இமேஷா ஆகிய இருவரும் இரண்டு பிரிவுகளிலும் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று பலத்த பாராட்டைப் பெற்றனர்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவிகள் மூவர் பதக்கங்கள் சுவீகரித்தது விசேட அம்சமாகும். இவர்கள் மூவரும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளாவர்.

Share:

Related Articles