(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உலக கோப்பை செஸ் போட்டி தொடர் அஸர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78ஆவது காய் நகர்த்தலில் டிரா செய்தார்.
அரை இறுதி சுற்றின் 2ஆவது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47ஆவது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் டிரா ஆனது.
இரு ஆட்டங்களும் டிரா ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டம் இன்று (21) நடக்கிறது.
மற்றொரு அரை இறுதியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் 1.5-0.5 என்ற கணக்கில் நிஜாத் அபா சோவை (அஸர்பைஜான்) வீழ்த்தினார்.