உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிச்சுற்றில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளிக்கணக்கில் மெக்சிகோவின் ஆன்ட்ரியா பிசெர்ராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அதிதி உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் சீனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையையும் அதிதி தனதாக்கியுள்ளார். நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதி வென்ற 2வது தங்கப்பதக்கம் இதுவாகும; என்பதும் குறிப்பிடத்தக்கது.