கிளிநொச்சி – ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபாண்டிய முனை பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியைக் கைவசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபகுதியைத் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.