எரிபொருள் விலை குறைக்கப்பட்டதற்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்துள்ளதுடன், ஒட்டோ டீசலின் விலை 24 ரூபாவிலும் மற்றும் முன்பு 10 ரூபாவிலும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அதன்படி, கொள்கலன்போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எமது செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள மேலும் தெரிவித்துள்ளார்.