NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிபொருள் விலைகளில் திருத்தம்!

எரிபொருள் விலையில் திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 328 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக இருக்கும். 

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 308 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 346 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 236 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலை திருத்தமானது நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, வீட்டு பாவனைக்கான மின்சார கட்டணம் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு உட்பட்ட பிரிவுக்கு, 65 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அலகொன்றுக்கான கட்டணம், 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாதாந்த நிலையான கட்டணத்தை, 400 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Share:

Related Articles