NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணி வீரர்கள்..!

கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்ய, கமிந்து மெண்டிஸ் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ட்ரெவில் ஹெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

செப்டம்பர் மாதம் இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து பிரபாத் ஜெயசூர்ய மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இவ்வாறு குறித்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கமிந்து மெண்டிஸ் கடந்த செப்டம்பர் மாதம் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் 90.20 என்ற சராசரியில் 451 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அத்துடன் பிரபாத் ஜெயசூர்ய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவுஸ்திரேலிய அணியின் ட்ரெவில் ஹெட் இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரரை ஐசிசி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளது.

Share:

Related Articles