(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் அங்குள்ள எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1600 நில அதிர்வுகள் அளவிடப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், அது தொடரவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நான்கு அதிர்வுகள் 4 ரிச்டர் அளவுக்கு மேல் இருந்ததாகவும், இது லேசான நிலநடுக்கும் எனவும் கருதப்படுகிறது. இருந்தாலும் விமானம் பறப்பதற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.