NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒருநாள் ஆசியக் கிண்ணத்திற்கான நேபாள அணி அறிவிப்பு !

2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 17 பேர் கொண்ட நேபாள கிரிக்கெட் அணிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஞானேந்திர மல்லாவின் ஓய்விற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ள நேபாள அணியானது ஆசியக் கிண்ணத் தொடரில் 20 வயது நிரம்பிய ரோஹிட் பௌடேல் மூலம் வழிநடாத்தப்படவிருக்கின்றது.

பெளேடல் நேபாள கிரிக்கெட் அணியினை இதுவரை 27 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வழிநடாத்திய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். இன்னும் பௌடேல் ஆசியக் கிண்ணத்தின் எஞ்சிய அணியினைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தகுதிகாண் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது வீரராக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஐ.சி.சி. இன் ஒருநாள் தகுதிகாண் தொடரில் ஆடாது போயிருந்த வலதுகை துடுப்பாட்டவீரரான சுந்தீப் ஜோரா ஆசியக் கிண்ணத்தில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதோடு 17 வயது நிரம்பிய அறிமுக சுழல்வீரர் மோசோம் தாக்கலிற்கும் நேபாள அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

நேபாள அணி ஆசியக் கிண்ணத்தில் பங்கெடுக்க முன்னர் பாகிஸ்தான் பயணமாகி விஷேட பயிற்சிகளைப் பெறவிருப்பதாக கூறப்பட்டிருப்பதோடு அங்கே பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் விஷேட அணிளோடு பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நேபாள அணி ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் காணப்படும் குழுவில் காணப்படுவதோடு அவ்வணி ஆசியக் கிண்ணத்தில் விளையாடும் முதல் போட்டி இம்மாதம் 30ஆம் திகதி பாகிஸ்தான் அணியுடன் ஆரம்பமாகுகின்றது.

நேபாளக் குழாம்

ரோஹிட் பௌடேல் (தலைவர்), குசால் பார்த்தேல், ஆசிப் ஷெய்க், பீம் சிர்க்கி, குஷால் மல்லா, ஆரீப் ஷெய்க், தீபந்திரே சிங் அய்ரி, குல்ஷான் ஜா, சோம்பல் கமி, கரண் KC, சந்தீப் லமிச்சானே, லலித் ராஜ்பன்ஷி, பிரத்திஷ் GC, மொசோம் தாக்கல், சுந்தீப் ஜோரா, கிஷோர் மஹாட்டோ, அர்ஜூன் சௌத்

Share:

Related Articles