NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒலிம்பிக் போட்டியில் இன்று களம் இறங்கும் தருஷி!

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இலங்கை வீராங்கனையான தருஷி கருணாரத்ன பங்கேற்கும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில், தருஷியைத் தவிர மேலும் 3 வீராங்கனைகள் ஆசிய பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அந்த வீராங்கனைகள் பலஸ்தீனம், குவைட் மற்றும் பஹ்ரைன் நாட்டை சேர்ந்தவர்களாவர்.

மேலும், தருஷி கலந்து கொள்ளும் 6 வது ஆரம்ப போட்டியில் பங்கேற்ற ஒரே ஆசிய வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles