வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தபடி, அவுஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களாக அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
மேலும் சீரற்ற வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்படுள்ளன. .அதேபோல் ரெட்பெர்ன் ரயில் நிலையத்தில் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்திருப்பதால் அங்கு ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ரயில் மற்றும் விமான பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இவ்வாறு அவுஸ்திரேலியாவில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
				 
															






