NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேலியகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles