NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் குறித்த அறிவிப்பு..!

காலமான கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராமய விகாரையின் பிரதம குரு வண. ‘பொடி ஹாமுதுருவோ’ என அழைக்கப்படும் கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மாலை 5 மணியளவில் விகாரையை அண்மித்த மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக விகாரையின் இறுதிக் கிரியை குழு தெரிவித்துள்ளது.

வண. கலபொட ஞானிஸ்ஸர தேரர் தனது 81 ஆவது வயதில் இன்று காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே வண. கலபொட ஞானிஸ்ஸர தேரர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles