பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் LOLC இன் திவி சவிய திட்டம் தொடர்ந்தும் பல அர்ப்பணிப்புக்களை செய்துக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், LOLCஇன் திவி சவிய திட்டத்தின் இரண்டாம் கட்ட நிறைவில், 3000 பாடசாலைகள் என்ற மைல்கல்லை எட்டியதுடன், நாடளாவிய ரீதியில் 100 தொடக்கம் 150 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கும் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
அதன்தொடர்ச்சியாக, திவி சவிய புரட்சிகர கல்வி முயற்சியின் மூன்றாம் கட்டம் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை உயிர்ப்பிக்கும் வகையில் ‘எதிர்காலத்தைப் பரிசளித்தல்’ என்ற கருப்பொருளின் கீழ் இம்மாதம் தொடங்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 24 LOLC கிளைகள் பல விசேட திட்ட நடவடிக்கைகளை மூலோபாய ரீதியாக திட்டமிட்டுள்ளன. திவி சவிய திட்டமானது, இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தரம் ஒன்று முதல் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு அத்தியாவசியப் பாடசாலை பொருட்களை வழங்குவதன் மூலம் தேசத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதன் அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது.
இந்த உன்னதமான திட்டம் தொடக்க கட்டத்தில் 1400 பாடசாலைகளை வெற்றிகரமாக சென்றடைந்ததுடன், அதன் தாக்கத்தை இரண்டாம் கட்டத்தில் மேலும் 1600 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தியது. மூன்றாம் கட்டத்தின் ஆரம்பத்துடன், LOLC திவி சவிய மேலும் 1204 பாடசாலைகளை உள்ளடக்கும் என எதிர்பார்க்கிறது.
LOLC குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி
கபில ஜயவர்தன இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், திவி சவியவின் மனிதாபிமான முயற்சிகளின் மற்றொரு கட்டத்தை அறிவிப்பதில் LOLC பெருமிதம் கொள்கிறது.
இந்த கிறிஸ்மஸ், பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியை விட அதிகமாக கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மூன்றாம் கட்டத்தின் முடிவில், வரம்பற்ற எண்ணிக்கையிலான குழந்தைகளின் கல்வியில் 40 சதவீதம் அதிகமான பங்கினை எட்ட முடியும். இந்த சவாலான நேரத்தில் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் கல்விப் பயணத்தில் பங்களிக்க முடிந்ததையிட்டு பெருமை கொள்கிறோம்.
2.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில், குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் மாணவர்களை அனுமதிப்பதற்கும் ‘பூமியின் குழந்தைகளின் எதிர்காலம்’ என்ற திட்டத்தின் மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் பாடசாலை உபகரணங்களை விநியோகிக்க இந்த இலட்சியத் திட்டம் எதிர்பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.