NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்விக்காக கனடா சென்ற இலங்கையர் வாகன விபத்தில் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கல்விக்காக கனடா சென்ற இலங்கையர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்று அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்ற இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் 28 வயதான எம்.எச்.வினோஜ் யசங்க ஜெயசுந்தர என்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கல்விக்காக கனடா சென்றிருந்த வேளையில் வான்கூவர் நகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவரின் கவனக்குறைவால் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கொட்டாவை தர்மபால கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்தரத்தில் சித்தியடைந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது நிலையில் இவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவர் இறக்கும் போது கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.

கனடாவின் வான்கூவர் நகருக்கு பி.எச்.டி தொடர்பான ஆய்வுக் கட்டுரையை வழங்குவதற்காக திரும்பியபோது மின்சார சமிக்ஞை பலகைக்கு அருகில் கார் நிறுத்தப்பட்டிருந்தபோது வேகமாக வந்த கார் வினோஜின் காரை பின்னால் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், வினோஜ் இறந்து 19 நாட்களின் பின்னர் சடலம் நேற்று (11) மத்தேகொட நந்துன் உயனேயில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், காலி மனாங்கொட, படபொலவில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Share:

Related Articles