NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசா போரில் சேதமடைந்த கப்பல்களுக்கு இழப்பீடு !

காசா போரின் காரணமாக இஸ்ரேல் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் பல சேதமடைந்த நிலையில் அவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தற்போது நடத்தப்படும் சிறிய தரைவழித் தாக்குதல் வெறும் ஒத்திகை என பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் கடல் எல்லையில் இருந்த பல கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

இஸ்ரேல் கடல்வழி வர்த்தகத்தையே பிரதானமாக நம்பியிருக்கிறது. உணவுப் பொருட்கள் தொடங்கி தொழில்நுட்ப உதிரி பாகங்கள்வரை இஸ்ரேல் இறக்குமதி செய்கிறது.

இதனால் இஸ்ரேல் துறைமுகம் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடியது. அத்தகைய இஸ்ரேல் கடல் எல்லையில் போர் ஆரம்பித்தபோது பல வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பல சேதமடைந்தன.

இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘போர் சேதங்கள் என்பது எதிரி நாட்டின் குண்டுகள், ஏவுகணைகளால் ஏற்படுவது மட்டுமின்றி இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தாக்குதலின் போது நிகழும் சேதங்களையும் உள்ளடக்கியது என்றே சட்டம் வரையறுத்துள்ளது. ஆகையால் இஸ்ரேல் கடல் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு, தனியார் வர்த்தகக் கப்பல்கள் அனைத்திற்கும் நஷ்ட ஈடு வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles