இஸ்ரேல்- காஸா போர் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை தொடர்ந்து வருகின்ற நிலையில், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக காஸாவை சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல், பொதுமக்களின் குடியிருப்புகள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், காஸா பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது வரை 38,584 பேர் உயிரிழந்துள்ளதுடன் 88, 800 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.