NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணாமல் போன இரு மாணவிகள் – கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மொனராகலை – இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குறித்த மாணவிகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

16 வயதான பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இந்த இரு மாணவிகளும் நெருங்கிய நண்பிகள் என தெரிவிக்கப்பட்டது. பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடந்த 15ம் திகதி அஷானியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பாட்டியால் பராமரித்து வரும் அஷானி, கடந்த 15ஆம் திகதி காலை மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி பவீஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் இருவரும் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இரு மாணவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share:

Related Articles