ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து 4 வயது சிறுமியின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தெவ்மி அமயா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.